நாட்டுப்புற கலைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மாநில செயற்குழுவில் தீர்மானம்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு கல் வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக நாட்டுப்புற இசைக் கலைப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டுப்புற கலைஞர்களுக்கு கல் வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக நாட்டுப்புற இசைக் கலைப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஞான. அந்தோனிதாசன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் வீர. சங்கர், பி.எம். பாஸ்கர், சி. இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற இசைக் கலைஞர்கள்,  மாவட்ட , மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக அரசால் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாநில விருது, மாவட்ட விருதுகளை தகுதியானவர்களுக்கு வழங்க பெருமன்றம் பரிந்துரை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளில் அனுபவம் வாய்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மூலம் கலை மற்றும் இசை வகுப்புகள் நடத்த அரசு ஆவன செய்ய வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும், வாரிசுகளுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாவட்டந்தோறும் இசைப் பள்ளிகள் நடத்துவதுடன், இந்தப் பள்ளிகளில் மதிப்பூதிய அடிப்படையில் நாட்டுப்புற இசைக் கலைஞர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
வீடுகள் இல்லாத கலைஞர்களுக்கு மாவட்டந்தோறும் உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளில் வீடுகள் ஒதுக்கித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில், மாவட்டத் தலைவர் பழனிசாமி, மாவட்ட பொருளாளர் சக்திவேல், கருங்குயில் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com