குழந்தைகளை சுதந்திரமாக கல்விக் கற்க அனுமதியுங்கள்

குழந்தைகளை அவர்ளது விருப்பப்படியும், சுதந்திரமாகவும் கல்விக் கற்க அனுமதியுங்கள் என்று பெற்றோர்களை

குழந்தைகளை அவர்ளது விருப்பப்படியும், சுதந்திரமாகவும் கல்விக் கற்க அனுமதியுங்கள் என்று பெற்றோர்களை வலியுறுத்தினார் தமிழக அரசின் முதன்மைச் செயலர் வெ.இறையன்பு.
திருச்சி எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற முதலாமாண்டு விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
 குழந்தைகள் மகிழ்ச்சியாக கல்விக் கற்க வேண்டும். அப்பொழுதான் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. பிள்ளைகள் விருப்பப்படியும் சுதந்திரமாக கல்விக் கற்க அனுமதியுங்கள். குழந்தைகள் மண்ணோடும், மரங்களோடும், இயற்கையோடும் விளையாடத்தான் ஆசைப்படுவர். அவர்கள் மகிழ்ச்சியை சிதைக்கக்கூடாது என்றார் இறையன்பு.
ஓய்வு பெற்ற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி விழாவில் பேசியது:
தமிழகத்தில் நிறைய எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், அறிவியல் அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள். நம் தமிழகம் கலாசாரமும், பாரம்பரியமும் மிக்க மாநிலம். நாம் இங்கு பிறந்து கல்விக் கற்பதற்கு பெருமைப்பட வேண்டும். மொழி, நாட்டுப்பற்றோடு வாழ வேண்டும்.
 மேற்கத்திய கலாசாரத்திலிருந்து விடுபட்டு தாய் நாட்டின் கலாசாரத்தை பின்பற்றி, தேசத்தை பெருமை அடைய செய்ய வேண்டும்.   குழந்தைகள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வளர பள்ளிகளும் கல்லூரிகளும் துணை நிற்க வேண்டும். குழந்தைகளும் பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும். பாடப்புத்தகத்தை தாண்டி நிறைய புத்தகங்களை குழந்தைகள் வாசிக்க வேண்டும்.
வாசிப்புதான் ஒருவரை மேன்மை அடைய செய்யும் என்றார்.
 எழுத்தாளர்கள் பாஸ்கர்சக்தி , ச. தமிழ்ச்செல்வன் ஆகியோரும் பேசினர்.  ஆண்டு விழாவில்,  தாவரவியல் விஞ்ஞானி க.கந்தவேல், பள்ளித் தலைவர் எ.ராமசாமி, செயலர் பி.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.செல்வராஜன், துணைத்தலைவர் எம்.குமரவேல், இணைச்செயலர் பி.சத்யமூர்த்தி,  பள்ளி முதன்மைச் செயல் அலுவலர்  க.துளசிதாசன்,  பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கலை நிகழ்சிகளும் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com