சினிமா உள்ளவரை சிவாஜியின் புகழ் இருக்கும்

சினிமா உள்ளவரை சிவாஜியின் புகழ் இருக்கும் என திரைப்பட பாடலாசிரியர் வைரபாரதி தெரிவித்தார்.


சினிமா உள்ளவரை சிவாஜியின் புகழ் இருக்கும் என திரைப்பட பாடலாசிரியர் வைரபாரதி தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர்கள் நற்பணி சங்கம், சிவாஜி பிலிம் கிளப் சார்பில் நூல் வெளியீட்டு விழா மேலபுலிவார்டு சாலையில் உள்ள ஸ்ரீமான் சித்தார்த்த சபாவில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு அமைப்பின் தலைவர் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்தார்.
விழாவில், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரபாரதி கலந்துக்கொண்டு சிவாஜி பிலிம் கிளப் உறுப்பினர் வெங்கடேஷ் எழுதிய கவிதைகளால் என்ற நூலை வெளியிட்டு பேசுகையில், சினிமா, கலை உள்ளவரை சிவாஜியின் புகழ் இருக்கும். சிவாஜிக்கு பிறகு சினிமாவில் யாரும் சாதிக்க பிறக்கவில்லை. இளைஞர்கள் நடிகர் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும். சிவாஜி படங்கள் பெரும்பாலும் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரங்களை எடுத்து சொல்லும் பாடங்களாக இருக்கும் என்றார்.
நிகழ்வில், தமிழ் திரையுலகில் நடிகர் திலகமும் இசைஞானியும் என்ற தலைப்பில் கவிஞர் ஆதவன் ரவி பேசினார். புறநகர் சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் உறந்தை செல்வம். சிவாஜி பிலிம் கிளப் செயலாளர் சிவாஜி மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com