பல்கலைக்கழக ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

திருச்சியில் தனியார் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ச


திருச்சியில் தனியார் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி காட்டூர் பகுதியில் அமைந்துள்ளது உருமு தனலட்சுமிகல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிர்வாக ரீதியாக பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும், வெளி நபர்களை நிர்வாகக் குழுவில் இணைத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 
மாறாக ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருவதாகவும் அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாந்தி தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் என். சேட்டு, பொருளாளர் எஸ். செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மண்டல நிர்வாகிகள் சாம்பசிவம் (தலைவர்), கா. ராஜா (செயலாளர்), என்.பி.எம். சாதிக் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com