ரெனோ நிஸான் இந்தியாவுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி

ரெனோ நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பிஜு பாலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரெனோ நிஸான் இந்தியாவுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி


ரெனோ நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பிஜு பாலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
ரெனோ நிஸான் இந்தியாவின் தற்போதைய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கொலின் மெக்டொனால்டு ஐரோப்பியாவில் புதிய பொறுப்பு வகிப்பதற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்தப் பதவிகளுக்கு பிஜு பாலேந்திரன் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரெனோ - நிஸான் கூட்டணியில் அமைந்துள்ள சென்னை ஒரகடத்தில் உள்ள ஆலையின் தயாரிப்பு செயல்பாடுகள் அனைத்தையும் இனி பாலேந்திரன் கவனிப்பார்
புதிய தலைமை நிதி அதிகாரி: நிஸான் இந்தியாவின் புதிய தலைமை நிதி அதிகாரியாக சம்பத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நிறுவனம் மேற்கொண்டு வரும் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் இனி அவரே கவனிப்பார் என ரெனோ நிஸான் இந்தியா தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com