விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி

விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புதிய வாகனங்களை இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி

விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புதிய வாகனங்களை இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 
உள்நாட்டில் புதிய வாகனங்களை இறக்குமதி செய்து கொள்வதற்கு ஏற்கெனவே துறைமுகம் உள்ளிட்ட 15 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 16-ஆவதாக விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்தும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த 16 இடங்களில் இருந்து மட்டுமே இனி புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதிக்கான பட்டியலில், மும்பை, கொல்கத்தா, நவ சேவா, சென்னை, எண்ணூர், கொச்சி, காட்டுப்பள்ளி, கிருஷ்ணாம்பட்னம், மும்பை ஏர் கார்கோ காம்ப்ளக்ஸ், தில்லி ஏர் கார்கோ, சென்னை ஏர்போர்ட், டெலிகான் புனே, துக்ளகாபாத் மற்றும் பரிதாபாத் ஆகிய 15 இடங்கள் ஏற்கெனவே உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com