மோசடியை தவிர்க்கவே இந்நடவடிக்கை: 20 ஆயிரம் கட்டுப்பாடு குறித்து எஸ்பிஐ நிர்வாக இயக்குநர் விளக்கம்

நாளொன்றுக்கு இதுவரை ரூ.40,000 வரை ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கலாம் என்று வரம்பு ரூ.20,000ஆக குறைக்கப்பட்டது.
மோசடியை தவிர்க்கவே இந்நடவடிக்கை: 20 ஆயிரம் கட்டுப்பாடு குறித்து எஸ்பிஐ நிர்வாக இயக்குநர் விளக்கம்

பாரத ஸ்டேட் வங்கியின் கிளாசிக் ரக டெபிட் அட்டைகள் வைத்திருப்போர், நாளொன்றுக்கு இதுவரை ரூ.40,000 வரை ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கலாம் என்று வரம்பு ரூ.20,000ஆக குறைக்கப்பட்டது.

அதிகம் பயன்படுத்தப்படும் இந்த வகை டெபிட் அட்டைகளில், சிப்-கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. எனவே, இதன் பாதுகாப்பு கேள்விக்குரியானது. இதேபோன்று போலி அட்டைகள் தயாரிக்கப்படுவதாகவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு புகார்கள் வந்தன.

இருப்பினும் பிற ரக டெபிட் அட்டைகளை வைத்திருப்போருக்கு பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா கூறுகையில்,

மோசடி பரிவர்த்தனைகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி மேற்கொண்டுள்ளது. எனவே நாளொன்றுக்கு ரூ.20,000-க்கு மேல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க விரும்புகிறவர்கள், அதற்கெற்ற பிற ரக டெபிட் அட்டைகளை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று விளக்கமளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com