சில்லறைப் பணவீக்கம் 3.31 சதவீதமாக குறைந்தது

சில்லறைப் பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 3.31 சதவீதமாக குறைந்துள்ளது.
சில்லறைப் பணவீக்கம் 3.31 சதவீதமாக குறைந்தது

சில்லறைப் பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 3.31 சதவீதமாக குறைந்துள்ளது.
 இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
 காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதச் சத்து நிறைந்த பொருள்களின் விலை குறைந்ததையடுத்து அக்டோபர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.31 சதவீதமாகியுள்ளது. இது ஓராண்டில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.
 நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் இப்பணவீக்கம் நடப்பாண்டு செப்டம்பரில் 3.7 சதவீதமாகவும், கடந்தாண்டு அக்டோபரில் 3.58 சதவீதமாகவும் காணப்பட்டது.
 இதற்கு முன்பாக, கடந்த 2017 செப்டம்பரில் தான் சில்லறைப் பணவீக்கம் 3.28 சதவீதமாக மிகவும் குறைந்து காணப்பட்டது.
 அக்டோபரில் காய்கறிகளின் விலை 8.06 சதவீதம் குறைந்திருந்தது. பழங்கின் விலையும் 1.12 சதவீதத்திலிருந்து சரிந்து 0.35 சதவீதமாக காணப்பட்டது. அதேசமயம், எரிபொருள்களுக்கான பணவீக்கம் 8.47 சதவீதத்திலிருந்து உயர்ந்து 8.55 சதவீதமாக இருந்தது.
 மதிப்பீட்டு மாதத்தில், உணவு தானியங்கள், முட்டை, பால் உள்ளிட்ட புரதச் சத்துள்ள பொருள்களின் விலை குறைந்தே காணப்பட்டது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com