நிலக்கரி உற்பத்தி 37 கோடி டன்னாக அதிகரிப்பு

நாட்டின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் -அக்டோபர் வரையிலான கால அளவில் 37.03 கோடி டன்னாக உயர்வைக் கண்டுள்ளது. 
நிலக்கரி உற்பத்தி 37 கோடி டன்னாக அதிகரிப்பு


நாட்டின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் -அக்டோபர் வரையிலான கால அளவில் 37.03 கோடி டன்னாக உயர்வைக் கண்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில் நிலக்கரி உற்பத்தி 37 கோடி டன்னை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் காணப்பட்ட நிலக்கரி உற்பத்தியான 33.52 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது 10.4 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 56.57 கோடி டன்னாக காணப்பட்டது. இந்த நிலையில் நான்கே ஆண்டுகளில் அதன் உற்பத்தி 11.07 கோடி டன் உயர்ந்து 67.64 கோடி டன்னை எட்டியது.
2009-10 மற்றும் 2013-14 ஆண்டுகளுக்கிடையில் நிலக்கரி உற்பத்தி 3.37 கோடி டன் மட்டுமே அதிகரித்தது.
நவம்பர் 12-ஆம் தேதி நிலவரப்படி கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 9.6 சதவீதம் அதிகரித்து 32.66 கோடி டன்னாக காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் நிலக்கரி விற்பனை 8.3 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, கோல் இந்தியாவின் விற்பனை 7.4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் நிலக்கரிக்கான தேவையானது 99.13 கோடி டன்னாக (இறக்குமதி உள்பட) நீதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது. 
ஒட்டுமொத்த நிலக்கரி தேவையான 99.13 கோடி டன்னில் மின்துறைக்கு 76.06 கோடி டன்னும், மின் சாரா துறைக்கு 23.06 கோடி டன்னும் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீத பங்களிப்பை கோல் இந்தியா வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 2018-19 நிதியாண்டில் 65.20 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com