ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் ரூ.18,639 கோடியாக அதிகரிப்பு

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வசூல் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ரூ.18,639.29 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் ரூ.18,639 கோடியாக அதிகரிப்பு


ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வசூல் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ரூ.18,639.29 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளதாவது:
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பாலிசிகள் விற்பனையின் மூலம் கிடைக்கக்கூடிய மொத்த பிரீமியம் சென்ற 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ரூ.17,513.59 கோடியாக இருந்தது. இது, நடப்பாண்டு இதே கால அளவில் 6 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.18,639.29 கோடியை எட்டியுள்ளது.
ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 24 நிறுவனங்களில், பொதுத் துறையைச் சேர்ந்த எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வசூல் மதிப்பீட்டு மாதத்தில் 1.94 சதவீதம் குறைந்து ரூ.13,122.12 கோடியாகியுள்ளது. இதர 23 நிறுவனங்களின் மொத்த புதிய பிரீமியம் வசூல் ரூ.4,131.29 கோடியிலிருந்து 33.55 சதவீதம் அதிகரித்து ரூ.5,517.17 கோடியைத் தொட்டுள்ளது.
எஸ்பிஐ லைஃபின் பிரீமியம் வசூல் 38.45 சதவீதம் உயர்ந்து ரூ.1,135.71 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் பிரீமியம் 37.75 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.1,034.44 கோடியாகவும், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் பிரீமியம் 19.63 சதவீதம் அதிகரித்து ரூ.918.99 கோடியாகவும் இருந்தன.
ஆதித்ய பிர்லா சன் லைஃபின் புதிய பாலிசி விற்பனை வாயிலான பிரீமியம் 104 சதவீதம் அதிகரித்து ரூ.282.40 கோடியாகியுள்ளது. 
பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் 92.43 சதவீதம் உயர்ந்து ரூ.418.17 கோடியாகவும், டாடா ஏஐஏ லைஃப் பிரீமியம் 87.6 சதவீதம் அதிகரித்து ரூ.174.74 கோடியாகவும் இருந்தன. அதேசமயம், அவிவா லைஃப் பிரீமியம் 73.08 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.11.73 கோடியாகவும், பியூச்சர் ஜெனரலி இந்தியா பிரீமியம் 11.82 சதவீதம் சரிந்து ரூ.60.22 கோடியாகவும் இருந்ததாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com