குடும்ப நிறுவனங்களின் எண்ணிக்கை உலகளவில் இந்தியாவுக்கு 3-ஆவது இடம்

குடும்பத்துக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. 
குடும்ப நிறுவனங்களின் எண்ணிக்கை உலகளவில் இந்தியாவுக்கு 3-ஆவது இடம்


குடும்பத்துக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. 
இதுகுறித்து கிரிடிட் சுஸி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குடும்ப நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு 111 நிறுவனங்கள் குடும்பத்துக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. இவற்றின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 83,900 கோடி டாலராகும். சீனாவில் இந்த எண்ணிக்கை 159ஆகவும், அமெரிக்காவில் 121-ஆகவும் உள்ளன. ஜப்பான் சாராத ஆசியப் பகுதிகளில் சீனா, இந்தியா, ஹாங்காங் நாடுகள் இப்பட்டியலில் கோலோச்சியுள்ளன. 
நான்காவது இடத்தில் கொரியா உள்ளது. இங்கு 43 நிறுவனங்கள் குடும்பங்களுக்கு சொந்தமானவையாக உள்ளன. இதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு 43,410 கோடி டாலராகும். இதையடுத்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளில் தலா 26 நிறுவனங்கள் குடும்பப் பின்னணியுடன் செயல்பட்டு வருகின்றன.
உலக அளவில் லாபம் கொழிக்கக்கூடிய முதல் 50 நிறுவனங்களில் 24 ஆசியாவைச் சேர்ந்தவை. இவற்றின் மொத்த மூலதன சந்தை மதிப்பு 74,800 கோடி டாலர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 19,220 கோடி டாலர் சந்தை மூலதனத்தைக் கொண்ட 12 குடும்ப நிறுவனங்களும் அடக்கம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com