தனி வழி!

மின் சக்தி உள்ளிட்ட மாற்று எரிசக்தியில் இயங்குகின்ற வாகனங்களைக் கொண்டு பொதுப் போக்குவரத்தை இயக்க நிறுவனங்கள் முன்வந்தால், அதற்கு அரசு சார்பில் தேவையான ஒப்புதல்களை
தனி வழி!

மின் சக்தி உள்ளிட்ட மாற்று எரிசக்தியில் இயங்குகின்ற வாகனங்களைக் கொண்டு பொதுப் போக்குவரத்தை இயக்க நிறுவனங்கள் முன்வந்தால், அதற்கு அரசு சார்பில் தேவையான ஒப்புதல்களை உடனடியாக வழங்குவதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்திருக்கிறார்.
 அசோக் லேலண்ட், டாடா போன்று ஒன்றுக்கு மேற்பட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து, மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களைக் கொண்டு மாநகரங்களில் பொதுப் போக்குவரத்தை இயக்க முயற்சியெடுக்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற சர்வதேச போக்குவரத்து கருத்தரங்கின்போது அவர் மேலும் கூறுவது:
 இன்றைய போக்குவரத்துத் தேவையை அரசு போக்குவரத்து நிறுவனங்களால் நிறைவேற்ற முடியவில்லை. தனியாரால்தான் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். அல்லது லண்டன் போல தனியார் - அரசு கூட்டமைப்பு இதனைச் செய்யலாம். பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுரங்க ரயில், மாநகரப் பேருந்து, நகர்ப்புற போக்குவரத்து ரயில் உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைந்து "டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன்' என்கிற நகர்ப்புற போக்குவரத்தை நடத்தி வருகின்றன.
 இந்தக் கூட்டமைப்பில் அரசு போக்குவரத்து அமைப்புகளும் உண்டு, தனியார் போக்குவரத்து அமைப்பகளும் உண்டு. அதுபோல இந்தியாவிலும் நடைமுறைப்படுத்துவது சாத்தியம்தான். நம் நாட்டு நிறுவனங்கள் அதுபோல இணைந்து, பொதுப் போக்குவரத்துக்கான ஓர் அமைப்பை உருவாக்கினால், அதற்கான எல்லா ஒப்புதல்களையும் உடனடியாக வழங்கிவிடுவேன்.
 பெட்ரோல், டீசலைவிட மின்சாரம் மலிவானது. சரக்கு வாகனங்களை மின்சாரம் மூலம் இயக்கினால் போக்குவரத்துச் செலவைக் குறைக்கலாம். நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்கள் செல்வதற்கு பிரத்யேக பாதை அமைக்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com