கரடியின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கரடியின் பிடியில் சிக்கியதையடுத்து சென்செக்ஸ் 7 மாதங்களில் காணப்படாத அளவில் ஒரு நாள் சரிவை சந்தித்தது.
கரடியின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி


இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கரடியின் பிடியில் சிக்கியதையடுத்து சென்செக்ஸ் 7 மாதங்களில் காணப்படாத அளவில் ஒரு நாள் சரிவை சந்தித்தது.
சர்வதேச சந்தைகளின் பாதகமான நிலை, ரூபாய் மதிப்பு சரிவு, நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது. முதலீட்டாளர்கள் லாப நோக்குடன் செயல்பட்டதையடுத்து 5-ஆவது நாளாக சந்தை வீழ்ச்சியை சந்தித்தது.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 80 டாலரை தாண்டியதையடுத்து, விமான போக்குவரத்து நிறுவனப் பங்குகளின் விலை சரிவைக் கண்டன. குறிப்பாக, ஸ்பைஸ் ஜெட் பங்கு 7.20 சதவீதம் சரிந்து ரூ.71.50-ஆகவும், இன்டர்குளோப் ஏவியேஷன் பங்கு 4.97 சதவீதம் குறைந்து ரூ.860.65-ஆகவும் காணப்பட்டன.
அதேசமயம், டிசிஎஸ், கோல் இந்தியா பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாக 36,305 புள்ளிகளில் நிலைத்தது. பிப்ரவரி 6-க்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச ஒரு நாள் சரிவு இதுவாகும்.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 175 புள்ளிகள் குறைந்து 10,967 புள்ளிகளில் நிலைத்தது.
ரூபாய் மதிப்பு43 காசுகள் சரிவு
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க வுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 80 டாலரை கடந்தது. அதன் எதிரொலியாக, திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 43 காசுகள் (0.60%) சரிந்து 72.63-ஆனது. வர்த்தகத்தின் இடையே ரூபாயின் மதிப்பு 72.73 வரை குறைந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com