3 ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 5 மடங்கு உயர்வு

கடந்த மூன்று ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 5 மடங்கு அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை
கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா.
கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா.


கடந்த மூன்று ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 5 மடங்கு அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு கருத்தரங்கை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:
கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 130 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9,000 கோடி) இருந்தது. இது மூன்றே ஆண்டுகளில் ஐந்து மடங்கு அளவுக்கு அதிகரித்து கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 620 கோடி டாலரை (ரூ.43,500 கோடி) எட்டியது.
தொலைத் தொடர்புத் துறையில் எதிர்காலத்தில் வரவிருக்கும் அதிநவீன தொழில்நுட்ப முறைகள் அந்நிய நேரடி முதலீட்டை பெருமளவு கவருவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
மத்திய அரசின் புதிய தொலைத் தொடர்புத் துறை கொள்கை அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் தொலைத் தொடர்புத் துறையில் 10,000 கோடி டாலர் (ரூ.7 லட்சம் கோடி) ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு புதிய கொள்கை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதிலும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது.
புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அவற்றை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் கொண்டு சேர்க்க நமக்கு அதிக அளவில் முதலீடு தேவைப்படுகிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்க நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். எனவே, உலக அளவில் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம்.
எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியை மனதில் கொண்டுதான் தேசிய டிஜிட்டல் தொலைத் தொடர்பு கொள்கை (என்டிசிபி) 2018 வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 
புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (செப்.26) ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com