சௌத் இந்தியன் வங்கி லாபம் 27% சரிவு

தனியார் துறையைச் சேர்ந்த சௌத் இந்தியன் வங்கியின் லாபம் மூன்றாவது காலாண்டில் 27 சதவீதம் சரிவடைந்துள்ளது.

தனியார் துறையைச் சேர்ந்த சௌத் இந்தியன் வங்கியின் லாபம் மூன்றாவது காலாண்டில் 27 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபி-க்கு சனிக்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சௌத் இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,921.93 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.1,735.77 கோடியாக காணப்பட்டது. வருவாய் மேம்பட்ட நிலையிலும், வங்கியின் நிகர லாபம் ரூ.83.85 கோடியாக குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஈட்டிய வருவாயான ரூ.115 கோடியுடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் குறைவாகும். 
வங்கி வழங்கிய கடனில்,  மொத்த வாராக் கடன் விகிதம் 3.40 சதவீதத்திலிருந்து அதிகரித்து 4.88 சதவீதமாகியுள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 2.35 சதவீதத்திலிருந்து உயர்ந்து 3.54 சதவீதத்தை எட்டியுள்ளது என சௌத் இந்தியன் வங்கி அந்த அறிக்கையில்
கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com