இணைத்தல்-கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு 11,000 கோடி டாலர்

இந்திய நிறுவனங்களின் இணைத்தல்-கையகப்படுத்துதல், தனியார் பங்கு முதலீட்டு  நடவடிக்கைகள் கடந்த 2018-ஆம் ஆண்டில் 11,000 கோடி டாலராக இருந்தது என கிராண்ட் தோர்ன்டன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனங்களின் இணைத்தல்-கையகப்படுத்துதல், தனியார் பங்கு முதலீட்டு  நடவடிக்கைகள் கடந்த 2018-ஆம் ஆண்டில் 11,000 கோடி டாலராக இருந்தது என கிராண்ட் தோர்ன்டன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல், தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கைகளை பொருத்தவரையில் 2018-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சாதனை ஆண்டாக அமைந்திருந்தது.
கடந்தாண்டில் இரண்டு காலாண்டுகள் நிறுவனங்களின் ஒப்பந்த நடவடிக்கைகள் மந்தமாக இருந்தது. இருப்பினும், அதற்கு பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது. அதனை பிரதிபலிக்கும் வகையில், கடந்தாண்டில் 1,258 ஒப்பந்தங்களை நிறுவனங்கள் மேற்கொண்டன. இந்த எண்ணிக்கை 2017-இல் 1,149-ஆக இருந்தது. உள்நாட்டு ஒப்பந்தங்களின் மதிப்பு 583 கோடி டாலரிலிருந்து அதிகரித்து 3,421 கோடி டாலரானது. சர்வதேச ஒப்பந்தங்களின் மதிப்பு 814 கோடி டாலரிலிருந்து அதிகரித்து 3,852 கோடி டாலராக காணப்பட்டது.
இந்திய நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் இணைத்தல்-கையகப்படுத்துதல், தனியார் பங்கு முதலீடு தொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தங்களின் மதிப்பு கடந்தாண்டில் 11,000 கோடி டாலரை (ரூ7.70 லட்சம் கோடி) எட்டியது.   
குறிப்பாக, தொலைத் தொடர்பு, இணைய-வணிகம், எரிசக்தி, தயாரிப்புத் துறை, சில்லறை வர்த்தகம், வேளாண் துறை ஆகியவற்றில் அதிக மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று, தகவல் தொழில்நுட்பம், மருந்து, வங்கி, ஊடகம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் கடந்தாண்டில் அதிக எண்ணிக்கையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கிராண்ட் 
தோர்ன்டன் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com