எல் அண்டு டி லாபம் ரூ.2,041 கோடி

பொறியியல், கட்டுமான துறையில் ஈடுபட்டு வரும் எல் அண்டு டி நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.2,041 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
எல் அண்டு டி லாபம் ரூ.2,041 கோடி

பொறியியல், கட்டுமான துறையில் ஈடுபட்டு வரும் எல் அண்டு டி நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.2,041 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நிறுவனத்துக்கு செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.35,708.87 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் கிடைத்த வருவாய் ரூ.28,747.45 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 24.21 சதவீத வளர்ச்சியாகும். 
சர்வதேச செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.11,476 கோடியாக இருந்தது. இது மொத்த வருவாயில் 32 சதவீத பங்களிப்பு. கடந்தாண்டின் பங்களிப்பான 35 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இது நடப்பாண்டில் குறைந்துள்ளது. நிகர லாபம் ரூ.1,489.98 கோடியிலிருந்து 37 சதவீதம் அதிகரித்து ரூ.2,041.62 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் எல் அண்டு டி நிறுவனத்துக்கு ரூ.42,233 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்கள் கிடைத்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் இது ரூ.48,130 கோடியாக காணப்பட்டது.
பங்குதாரர்களுக்கு மதிப்பை உருவாக்கித் தரும் வகையில், 6.1 கோடி பங்குகளை அவர்களிடமிருந்து திரும்பப் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு பங்கு ரூ.1,475 என்ற விலையில் மொத்தம் ரூ.9,000 கோடி இதற்காக செலிடப்படும் என்று எல் அண்டு டி நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com