2-வது இடைக்கால ஈவுத்தொகை: ஐஓசி அறிவிப்பு

 பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான 2-வது இடைக்கால ஈவுத் தொகையை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.


 பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான 2-வது இடைக்கால ஈவுத் தொகையை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஐஓசி நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கு  2-வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.1,412 கோடியை வழங்கவுள்ளது.
அதன்படி பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 15 சதவீதம் (ரூ.1.50) 2-வது இடைக்கால ஈவுத் தொகையை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு முன்னதாகவே இந்த ஈவுத் தொகை பங்குதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
ஐஓசி-யில் 53.88 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளதற்காக மத்திய அரசுக்கு ரூ.761 கோடி (ஈவுத்தொகை விநியோக வரி நீங்கலாக) கிடைக்கும் என  ஐஓசி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com