வீட்டுமனை, மருத்துவம், ஏ.சி.- பிரிட்ஜ் அனைத்தும் ஒரே இடத்தில்! கிராண்ட் எக்ஸ்போ சென்னையில் இன்று தொடக்கம்

மருத்துவம்,  வீட்டுமனை,  வீட்டு உபயோகப் பொருள்கள் என பல்துறை சார்ந்த கண்காட்சி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
வீட்டுமனை, மருத்துவம், ஏ.சி.- பிரிட்ஜ் அனைத்தும் ஒரே இடத்தில்! கிராண்ட் எக்ஸ்போ சென்னையில் இன்று தொடக்கம்


மருத்துவம்,  வீட்டுமனை,  வீட்டு உபயோகப் பொருள்கள் என பல்துறை சார்ந்த கண்காட்சி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியைப் பார்வையிட அனுமதி இலவசம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்,  பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை இணைந்து இக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மருத்துவமனைகள், வீட்டு உபயோகப் பொருள்கள்,  மின்னனு சாதனங்கள் மற்றும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒரே இடத்தில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.3 லட்சம் முதல் சொந்த வீடு...  வீடு மற்றும் வீட்டு மனை விற்பனையில் கடந்த சில ஆண்டுகளாகத் தொய்வு  ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் துறை விறுவிறுப்பு அடைந்துள்ளது. புதிய லே அவுட்டுகள், புதிய அடுக்கு மாடி வீடுகள், வில்லா ரக பங்களா வீடுகள் என்று ரியல் எஸ்டேட் விற்பனை சூடு பிடித்துள்ளது.
 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கிராண்ட் எக்ஸ்போவில் வீடு மற்றும் வீட்டு மனை நிறுவனங்களுக்கு என தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன.  புகழ்பெற்ற  வி.ஜி.என்,  அசோக் நந்தவனம்,  ஜெயின் ஹவுஸிங்,  ராயல் லாண்ட் மற்றும் அபி எஸ்டேட் போன்ற நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.  கண்காட்சியில் ரூ.3 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை வீடு மற்றும் வீட்டு மனைகள் விற்பனைக்காக உள்ளன.
மகத்தான மருத்துவ சிகிச்சைகள்:  மருத்துவக் கண்காட்சியில்  தமிழகத்தின் முன்னணி மருத்துவமனைகள் தங்களது அரங்குகளை அமைத்திருக்கின்றன. அலோபதி,  சித்த மருத்துவம்,  ஹோமியோபதி, அக்குபஞ்சர், வர்மம், இயற்கை சிகிச்சை முறைகள், ஆர்கானிக் உணவு முறைகள் போன்றவைகளை விளக்கும் அரங்குகள் இக் கண்காட்சியில் அமைக்கப்பட உள்ளன.
சங்கர நேத்ராலயா வழங்கும் இலவச கண் பரிசோதனை, ஜெம் மருத்துவமனை வழங்கும் இலவச மஞ்சள் காமாலை பரிசோதனை, எல்ஜே ஏஜென்சிஸ் வழங்கும் இலவச காது பரிசோதனை,  ஆர்த்தி ஸ்கேன்ஸ் வழங்கும் உடல் நல பரிசோதனைகள், ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவச அக்குபஞ்சர் ஆலோசனைகள், சர்க்கரை நோய் ஆய்வு,  ரத்த அழுத்த பரிசோதனை,  பல் பரிசோதனை போன்றவைகள்  கண்காட்சியில் மேற்கொள்ளப்படவுள்ளன.  
அல்மா ஹெர்பல்ஸின் இலவச மருத்துவ ஆலோசனைகள், இலவச வர்ம சிகிச்சை,  உங்கள் உடல் வாதமா... பித்தமா....கபமா... என்பதை அறிந்து கொள்ள  நிபுணர்கள் பார்வையாளர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கின்றனர். அல்மா ஹெர்பல்ஸ் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெறவுள்ளது.  தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகள்,  சிறு தானிய பயிறு வகைகள், தேன், தினை மாவு, கருப்பட்டி, செக்கு எண்ணெய் போன்றவைகளும் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
 டி.வி. முதல் ஏ.சி. வரை...: வீட்டு உபயோகப் பொருள்கள் சந்தையில்   முன்னணி நிறுவனமான வசந்த் அன்ட் கோ தனது பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த பர்னிச்சர்கள்,  முந்திரி, திராட்சை குவியல்கள், வெயிலைச் சமாளிக்க குளிர் கண்ணாடிகள்,  பருத்தி ஆடைகள், பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்,  கண்ணைக் கவரும் புடவை வகைகள்,  மணி பர்ஸ்கள்,  சி.சி.டி.வி. கேமராக்கள்,  சோலார் லைட்டுகள்  என்று  இந்தக் கோடையைக் குதூகலமாக மாற்றி மக்களுக்கான  ஷாப்பிங் சந்தோஷத்தை இக்கண்காட்சி வழங்க இருக்கிறது.
வாடிக்கையாளர்களின் சந்தோஷத்தை மேலும் அதிகப்படுத்த கண்காட்சி நடை பெறும் மூன்று நாட்களும் மாலை வேளைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகள்,  விஜய் டிவி புகழ்  பலகுரல் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், குழந்தைகள் குதூகலமாய் விளையாட கிட்ஸ் úஸான் என்று பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 அல்மா வேலாயுதம் உரை
கிராண்ட் எக்ஸ்போ  கண்காட்சியில் அல்மா சித்தா மருத்துவமனை நிறுவனர் அல்மா வேலாயுதம்  தமிழர் பாரம்பரியம், அறிவியல், உணவுகள் மருத்துவம் பற்றிய தொகுப்பு,  சித்த மருத்துவத்தின் சிறப்புகள், இயற்கை மருத்துவத்தின் நன்மைகள், உணவு பற்றிய விழிப்புணர்வு,  நோய் வருமுன் காக்கும் நுட்பங்கள், வழிமுறைகள் மற்றும் நோயின்றி வாழும் ரகசியம்  போன்ற தலைப்புகளில்  கண்காட்சி நடைபெறும் மூன்று நாள்களும் உரையாற்றவுள்ளார்.  
தினமும் மாலை 6  மணியிலிருந்து 7 மணி வரை இந்த சிறப்புரையை பார்வையாளர்கள் கண்டு களிக்கலாம்.

அடுப்பில்லாத சமையல்
கண்காட்சியின் மற்றுமொரு சிறப்பு அடுப்பில்லாமல், நெருப்பில்லாமல் , எண்ணெய் இல்லாமல் சமைப்பது. 
இந்த சமையலை செஃப் கிரிஜா செய்து காண்பிக்க உள்ளார்.  ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் துறையில் பல ஆண்டு  அனுபவம் உள்ள  செஃப் கிரிஜா அடுப்பு இல்லாமல் பிரியாணி முதல் பாசந்தி வரை சமைக்க இருக்கிறார். 
இயற்கையான பொருள்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு இந்த சமையல் நிகழ்ச்சி நடைபெறும்.  கண்காட்சி நடைபெறும் நாள்களில் தினமும் நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை அடுப்பில்லாத சமையல்  நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

வெஸ்பா ஸ்கூட்டரின் பிரத்யேக சலுகை 
சாலைகளில் பயணிக்கும் போது கண்ணைக் கவரும்  பளிச் புளோரசண்ட் வண்ணங்களில் நம்மை திரும்பிப் பார்க்க வைக்கும் ஸ்கூட்டர் வெஸ்பா.  இரு சக்கர வாகன விற்பனைச் சந்தையில் அறிமுகமான சில நாள்களிலேயே மக்களின் மனதைக் கவர்ந்து விட்டது வெஸ்பா ஸ்கூட்டர் எனலாம்.  
இந்தக் கண்காட்சியில் பிரத்யேக அரங்கு அமைத்துள்ள வெஸ்பா ஸ்கூட்டர், தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகைகளை வழங்கியுள்ளது. கண்காட்சியில் வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கினால் தடாலடியாக ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படவுள்ளன. இந்தக் கண்காட்சியில் மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com