ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் மும்பை அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு
ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் மும்பை அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பதவி: Motor Vehicle Mechanic - 09
பதவி: Motor Vehicle Electrician  - 01
பதவி: Welder - 02
பதவி: Tyreman - 01
பதவி: Painter - 01 
பதவி: Tinsmith - 01

சம்பளம்: மாதம் ரூ.19,900 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 8 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள், இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“The Senior Manager, Mail Motor Services,134-A, S. K. AHIRE MARG, WORLl, MUMBA140001"

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/SkilledArtisan_MMSMumbai_09112018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com