வறண்டுபோகும்  நிலையில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம்

பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது. இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். இந்நிலையில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் குட்டையாக மாறியுள்ளது. குளத்தில் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லாததால் வாத்துக்கள் உள்ளிட்ட பறவைகள் தவித்து வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குளம் முற்றிலும் வறண்டுபோக வாய்ப்புள்ளதால் குளத்தில் வசிக்கும் மீன்களை காப்பாற்ற, அதில் தண்ணீர் நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
வறண்டுபோகும்  நிலையில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com