கும்பகோணத்தில் பன்னிரெண்டு  கருடசேவை

கோவில் நகரமான  கும்பகோணத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3 வது திதியான அட்சய திருதியை தினத்தில் இப்பகுதியில் அமைந்துள்ள 12 வைணவ ஆலயங்களில்  இருந்து உற்சவ பெருமாள்கள் குடந்தை நகரின் முக்கிய வீதியான டி.எஸ்.ஆர் பெரிய தெருவில் அமைக்க பெற்றுள்ள அலங்கார பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். உலக புகழ் பெற்ற இவ்விழா (12. கருடசேவை) இந்த வருடம்  அட்சய திருதி நாளான 07.05.2019 அன்று காலை  மிகச் சிறப்பாக  நடைபெற்றது. இதனை முன்னிட்டு அருள்மிகு 1. ஸ்ரீசாரங்கபாணி சுவாமி, 2. ஸ்ரீசக்கரபாணி சுவாமி, 3. ஸ்ரீராமசுவாமி, 4. ஸ்ரீஆதிவராக சுவாமி, 5. கடைத்தெரு ஸ்ரீராஜகோபால சுவாமி, 6. பாட்சாரியார் தெரு ஸ்ரீகிருஷ்ண சுவாமி, 7. வெங்கட்ராயர் அக்ரகாரம் 8. ஸ்ரீபட்டாபிராம சுவாமி, 9. தொப்புத்தெரு ஸ்ரீராஜகோபாலஸ்வாமி  10. மல்லுகச்செட்டித்தெரு ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண சுவாமி, 11. புளியஞ்சேரி ஸ்ரீவேணுகோபால் சுவாமி, 12. கொட்டையூர் ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி,13. மேலக்காவேரி ஸ்ரீவரதராஜ பெருமாள் சுவாமி,14. அகோபிலமடம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி மற்றும் 15. வரதராஜப் பெருமாள் 16. வேதநாராயணபெருமாள் 17. வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் எழுந்தருள நேர் எதிர் கடைத்தெரு ஸ்ரீஆஞ்சனேயர் அம்மன்கோயில்தெரு ஸ்ரீஆஞ்சனேயர். மற்றும்  திருமங்கையாழ்வார, நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளும் நிகழ்ச்சியானது மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். படங்கள் உதவி: குடந்தை ப.சரவணன் 9443171383
கும்பகோணத்தில் பன்னிரெண்டு  கருடசேவை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com