ரத்த சோகையா? இது உடலுக்கு மிகவும் நல்லது

அன்றாடம் உணவில் சேர்க்க கூடிய ஒரு மூலிகை கொத்துமல்லி இலை என சொல்லலாம்.
ரத்த சோகையா? இது உடலுக்கு மிகவும் நல்லது

அன்றாடம் உணவில் சேர்க்க கூடிய ஒரு மூலிகை கொத்துமல்லி இலை என சொல்லலாம். இது உணவிற்கு மணம் மற்றும் சுவையை கொடுப்பது மட்டுமில்லாமல் உடலுக்கு பல விதமான நன்மைகளை தரக் கூடியது. 

மருத்துவ குணம் நிறைந்த இந்த கொத்துமல்லிச் சாற்றை குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்னைகளை சரி செய்யலாம்.

நன்மைகள்:

கொத்துமல்லிச் சாறு சரும பிரச்னைகளை போக்க வல்லது. குறிப்பாக சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை சரி செய்யக் கூடியது.

கொத்துமல்லியில் உள்ள என்சைம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாகவும் சீராகவும் செயல்பட வைக்கும்.

ரத்த சோகை இருப்பவர்கள் கொத்துமல்லிச் சாறு குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம். மேலும் ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் இதை தொடர்ச்சியாக குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

செரிமானத்தை சீராக்கி குடல் மற்றும் இரைப்பைக்கு நன்மை அளிக்கிறது. கொத்துமல்லி அதிக அளவிலான கால்சியத்தை கொண்டுள்ளது. எனவே எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்னைகள் வராது.
- கூ.முத்துலெட்சுமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com