நாட்டின் பாதுகாப்பு நிலவரம் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆய்வு

சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீர் உள்பட நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆய்வு

புதுதில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீர் உள்பட நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நாட்டின் 70-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயரதிகாரிகளுடன் தில்லியில் விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால், மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹரிஷி, உளவு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் நாட்டில் உள்ள சூழல் குறித்தும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்தும் அவரிடம் அதிகாரிகள் விளக்கிக் கூறினர். மேலும் அமைதியைச் சீர்குலைக்க பயங்கரவாதிகளும் இதர சக்திகளும் ஏதேனும் முயற்சி மேற்கொண்டால் அவற்றை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விளக்கினர்.
தேசியத் தலைநகரான தில்லியின் பாதுகாப்பு நிலைமை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தில்லி செங்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை நடைபெற உள்ள சுதந்திர தின நிகழ்ச்சியில் பல்வேறு தலைவர்களும், அரசு உயரதிகாரிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் பிரதமர் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தீவிர பாதுகாப்பு: இதனிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரான ஸ்ரீகரில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
அங்கு சுதந்திர தின விழா நடைபெற உள்ள பக்ஷி மைதானம் சீல் வைக்கப்பட்டு மிகப் பெருமளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பக்ஷி மைதானத்தை நோக்கிச் செல்லும் அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் சுதந்திர தினக் கொண்டாட்டம் அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்த தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிúஸாரமில் உச்சகட்ட பாதுகாப்பு: வடகிழக்கு மாநிலமான மிúஸாரமிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் ஐஸாலில் சுதந்திர தின விழா நடைபெற உள்ள மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com