நோட்டாவிடம் தோற்ற இடதுசாரிகள், ஆம் ஆத்மி!

தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் நோட்டா வாக்குகளைவிட (யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை) குறைவாகவே இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜவாதி, தேசியவாத
நோட்டாவிடம் தோற்ற இடதுசாரிகள், ஆம் ஆத்மி!


தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் நோட்டா வாக்குகளைவிட (யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை) குறைவாகவே இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை பெற்றுள்ளன.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிúஸாரம் ஆகிய 5 மாநிலங்களில், சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகபட்சமாக 2.1 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. 90 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் 85 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை நிறுத்தியது. எனினும் அக்கட்சிக்கு ஒரு சதவீத வாக்கு கூட கிடைக்கவில்லை. 0.9 சதவீத வாக்குகள் மட்டுமே ஆம் ஆத்மியால் பெற முடிந்தது. இதேபோல சத்தீஸ்கரில் சமாஜவாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை 0.2 சதவீத வாக்குகளே பெற்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெறும் 0.4 சதவீத வாக்குகளே கிடைத்தன.
மத்தியப் பிரதேசத்தில் 1.5 சதவீத வாக்குகள் நோட்டாவில் பதிவாகி இருந்தன. இங்கு சமாஜவாதி கட்சி 1 சதவீத வாக்கும், ஆம் ஆத்மி 0.7 சதவீத வாக்கும் பெற்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் 1.3 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகின. 
இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜவாதி கட்சி ஆகியவை முறையே 1.3 சதவீதமும், 0.2 சதவீதமும் வாக்குகள் பெற்றன. ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை 0.4 சதவீத வாக்குகளைப் பெற்றன. தெலங்கானாவில் 1.1 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. இங்கு தேசியவாத காங்கிரஸ் 0.2 சதவீத வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா 0.4 சதவீத வாக்குகளும் பெற்றன. 
மிúஸாரம் மாநிலத்தில் 0.5 சதவீத வாக்குகள் நோட்டாவில் பதிவாகின. 5 மாநிலங்களில் இங்குதான் குறைவான வாக்குகள் நோட்டாவில் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com