மத்தியப் பிரதேசத்தில் 4 அமைச்சர்களை படுதோல்வியில் தள்ளிய நோட்டா

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம், எதிர்க்கட்சிகள் அல்ல, பாஜகவேதான் என்பதை நோட்டா உறுதி செய்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 4 அமைச்சர்களை படுதோல்வியில் தள்ளிய நோட்டா


போபால்: மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம், எதிர்க்கட்சிகள் அல்ல, பாஜகவேதான் என்பதை நோட்டா உறுதி செய்துள்ளது.

அதாவது மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீதான அதிருப்தியே, அதன் தோல்விக்குக் காரணம் என்பதோடு, அதனை மக்கள் நோட்டா மூலமாக வெளிப்படுத்தியிருப்பதும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

அதாவது, ஒட்டுமொத்தமாக பார்த்தால் பாஜக - காங்கிரஸ் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 0.1% தான். இதில் நோட்டா பெற்றிருக்கும் வாக்கு விகிதம் 1.4% ஆகும். அதாவது 5.4 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட, அந்த தொகுதியில் நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதும், மத்தியப் பிரதேசத்தில் பலமான அமைச்சர்கள் என்று கருதப்பட்ட 4 பேரின் தோல்விக்கு நோட்டாவே முக்கியக் காரணமாகியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது தெற்கு குவாலியரில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் வெறும் 121 மட்டுமே என்ற நிலையில், நோட்டாவுக்கு 1,550 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

அம்மாநில நிதித்துறை அமைச்சர் ஜெயந்த் மலையா 799 வாக்கு வித்தியாசத்திலும் (நோட்டா 1,299 வாக்குகள்), சுகாதாரத் துறை அமைச்சர் ஷரத் ஜெயின் 578 வாக்கு வித்தியாசத்திலும் (நோட்டாவுக்கு 1,209 வாக்குகள்) தோல்வி அடைந்துள்ளனர். அமைச்சர் அர்ச்சனா 5,120 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைய, அந்த தொகுதியில் நோட்டாவுக்கு 5,700 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதுபோல பல வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பறித்தது எதிர்க்கட்சியே அல்ல என்றும், பாஜக மீதான அதிருப்தியை மக்கள் நோட்டா மீது காட்டியதே என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com