நுண்ணறிவு பிரிவு, "ரா' அமைப்புகளின் தலைவர்களின் பதவிக் காலம் 6 மாதங்கள் நீட்டிப்பு

நுண்ணறிவு பிரிவு(ஐ. பி) மற்றும் "ரா' அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நுண்ணறிவு பிரிவு(ஐ. பி) மற்றும் "ரா' அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் ராஜீவ் ஜெயின் மற்றும் "ரா' அமைப்பின் செயலர் அனில் கே. தஷ்மானா ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவுற இருந்த நிலையில், அவர்களின் பதவிக்காலத்தை 6 மாதங்கள் நீட்டித்து ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான முடிவு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழுவால் எடுக்கப்பட்டது. 
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "நுண்ணறிவு பிரிவு மற்றும் "ரா' அமைப்புகளின் தலைஹமையை தொந்தரவு செய்ய மத்திய அரசு விரும்பவில்லை.  இந்த பதவிகளுக்கான புதிய நியமனத்தை வரும் மக்களவைத் தேர்தலுக்கு பின்பு ஆட்சியமைக்கும் புதிய அரசு முடிவெடுக்கட்டும் என்று விரும்பிய ஆளும் பாஜக அரசு, அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளது' என்றனர்.
1980-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் ஜெயின், கடந்த 2016-ஆம் ஆண்டு நுண்ணறிவு பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டார். ராஜீவ் ஜெயினின் பதவிக்காலம் டிசம்பர் 30-ஆம் தேதியும், தஷ்மானாவின் பதவிக்காலம் டிசம்பர் 29-ஆம் தேதியும் முடிவடைகிறது. இந்நிலையில் அவர்களின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதனிடையே, நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசகராக இருந்த அனில் ஸ்ரீவாஸ்தவாவை, அந்த அமைப்பின் முதன்மை ஆலோசகராகவும், மேற்கு வங்க பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ராம்பால் பவாரை, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் இயக்குநராகவும் அமைச்சரவை நியமனக் குழு நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com