நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும்: சுமித்ரா மகாஜன்

மக்களவையில் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அவர்களது இருக்கையில் சென்று அமருமாறு மக்களவைத் தலைவர்
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும்: சுமித்ரா மகாஜன்


மக்களவையில் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அவர்களது இருக்கையில் சென்று அமருமாறு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தினார். அப்போது, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மக்களவை நண்பகல் மீண்டும் கூடியபோது காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் நின்றவாறு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறியதாவது:
நான் முதலிலேயே கூறியிருந்தேன். உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. நாமெல்லாம் அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்கள் எல்லாம் மிகவும் முக்கியமானது. இதை நானும் ஏற்கிறேன். ஆனால், நாடாளுமன்றமானது விவாதங்கள் நடைபெறும் இடம். நீங்கள் எழுப்ப விரும்பும் எந்த விஷயங்களையும் அரசு விவாதிக்கத் தயாராக இருப்பதாக நினைக்கிறேன். ஆனால், இந்த வழிமுறை சரியல்ல. இது சரியான செய்தியைத் தராது. நாம் மக்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் ஐயம் இல்லை.
இதனால், நீங்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் இருக்கைக்கு சென்று அமருங்கள். நாடாளுமன்ற விதிகளின்படி அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்படும். 
நான் இன்றைக்கு வெளிப்படையாகவே கூறுகிறேன். வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கேட்பதாக கேள்விப்படுகிறேன். நாம் ஏராளமான மக்களின் வாக்குகள் பெற்று அவைக்கு வந்துள்ளோம். கொஞ்சம் பொறுப்பை உணர வேண்டும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com