தேசத் துரோகியாக்கப்படுவோம் என பயப்படாதீர்கள்; அநீதிக்கு எதிராகக் குரல் கொடுங்கள்: இப்படிச் சொன்னது யார்?

தேசத் துரோகி என்று கூறப்படுவோம் என பயந்து அநீதிக்கு எதிரான கருத்துக்களை சொல்லாமல் இருந்து விடாதீர்கள்; உங்கள் கருத்துக்களை தைரியமாக சொல்லுங்கள் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர்
தேசத் துரோகியாக்கப்படுவோம் என பயப்படாதீர்கள்; அநீதிக்கு எதிராகக் குரல் கொடுங்கள்: இப்படிச் சொன்னது யார்?


விஜயவாடா: தேசத் துரோகி என்று கூறப்படுவோம் என பயந்து அநீதிக்கு எதிரான கருத்துக்களை சொல்லாமல் இருந்து விடாதீர்கள்; உங்கள் கருத்துக்களை தைரியமாக சொல்லுங்கள் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக குரல் எழுப்பிய நீதிபதிகளின் குழுவுக்கு தலைமை வகித்தவர்தான் இந்த செல்லமேஸ்வர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற செல்லமேஸ்வர், புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அனைத்து அரசியல் கட்சிகளுமே தாங்கள் செய்வது சரி என்று நினைக்கிறார்கள். ஒரு வேளை அவர்களது நடவடிக்கையை எதிர்த்து கருத்துகள் முன் வைக்கப்பட்டால் அவர்கள் மீது தேசத் துரோகி என்று பட்டம் சுமத்துவது அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

தவறுகள் நடக்கும் போது அதனை சுட்டிக்காட்ட வேண்டும். ஒருவர் எப்போதும் நீராவிக் குளியலிலேயே இருந்தால், அவர் மீது சூரிய வெளிச்சம் படும்போது அவர்து தோல் பிய்ந்து போய்விடும் என்பதே தெரியாமல் போய்விடும். நமது கருத்துகளை தெரிவிக்காததும் இதுபோலத்தான். ஏதேனும் ஒரு விஷயம் தவறாக நடக்கும் போது அது பற்றி குரல் கொடுக்காமல் போனால் அதன் தாக்கம் முதலில் நம்மைத்தான் தாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com