தெலங்கானா தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடு

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையைத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையைத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.
 அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 20-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 22-ஆம் தேதி ஆகும்.
 அடுத்த மாதம் 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன. மாநிலத்தில் உள்ள சுமார் 2.73 கோடி வாக்காளர்களுக்காக 32,574 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேவை ஏற்பட்டால் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப் பேரவை, அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் பரிந்துரையின் பேரில் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி கலைக்கப்பட்டது. அவர் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இருந்த போதிலும், முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சந்திரசேகர் ராவ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com