புயலால் ஜி.எஸ்.எஸ்.வி. ராக்கெட்டுக்கு பாதிப்பில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

திட்டமிட்டப்படி நாளை மாலை ஜி.எஸ்.எஸ்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி அளித்துள்ளார். 
புயலால் ஜி.எஸ்.எஸ்.வி. ராக்கெட்டுக்கு பாதிப்பில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி


திருப்பதி: திட்டமிட்டப்படி நாளை மாலை ஜி.எஸ்.எஸ்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி அளித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன், இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் மண்டபத்தில் வேதபண்டிதர்கள் மூலம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 - டி2 ராக்கெட், ஜிசாட்- 29 செயற்கைக்கோளுக்கு, காஜா புயலால் எந்த பாதிப்பும் இருக்காது என்பதால் திட்டமிட்டபடி நாளை மாலை 5.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் போது கஜா புயல் 400 கி.மீ. தொலைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், புயல் திசைமாறும் பட்சத்தில் ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் விண்ணில் செலுத்துவது ஒத்திவைக்கப்படும் என்று சிவன் கூறினார். 

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 - டி2 ராக்கெட் 3 நிலைகளை கொண்ட ஒரு கனரக வகை ராக்கெட். இதில் 3 நிலைகளில் எரிப்பொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன. முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாவது நிலையில் திரவ எரிபொருள் மற்றும் மூன்றாவது நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. 10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் திறன்கொண்டதாகவும், 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது. தற்போது 3 ஆயிரத்து 423 எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைகோளை சுமந்து செல்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com