இந்தியாவில் ஓராண்டில் 100 ஜிபிபிஎஸ் இணையதள வேகம்

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் 100 ஜி.பி.பி.எஸ். வேக இணையதள வசதியை வரும் 2019 செப்டம்பரில் இந்தியா பெறும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
ஜிசாட் -29 தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 -டி ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அடுத்து அதன் மாதிரியுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இஸ்ரோ தலைவர்
ஜிசாட் -29 தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 -டி ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அடுத்து அதன் மாதிரியுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இஸ்ரோ தலைவர்


வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் 100 ஜி.பி.பி.எஸ். வேக இணையதள வசதியை வரும் 2019 செப்டம்பரில் இந்தியா பெறும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
ஜிசாட்-29 செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-டி2 ராக்கெட் மூலம் புதன்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டு, விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிவன் அளித்த பேட்டி:
இஸ்ரோ சார்பில் இப்போது அனுப்பப்பட்டுள்ள ஜிசாட்-29 செயற்கைக்கோள், அதிநவீன தகவல்தொடர்பு தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோளாகும். அடுத்ததாக ஜிசாட்-11, ஜிசாட்-20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும்.
இவற்றை அனுப்பி முடித்த பின்னர், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் வருகிற 2019 செப்டம்பரில் 100 ஜி.பி.பி.எஸ். வேக இணையதள வசதியைப் பெறும்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது எப்போது?: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யாங் திட்டத்தைப் பொருத்தவரை, பல்வேறு பரிசோதனைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக முதலில் இரண்டு முறை ஆளில்லாத விண்கலகஈகர விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் புவிக்கு கொண்டு வரப்பட்டு சோதிக்கப்படும். அதன் பிறகு மூன்றாவது முறை அனுப்பும்போது, 3 பேருடன் விண்கலம் அனுப்பப்படும். அவர்கள் விண்வெளியில் 5 முதல் 7 நாள்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு விட்டு, பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வருவர்.
இந்தத் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பும் நபர்களைத் தேர்வு செய்வது என்பது, இஸ்ரோ மட்டுமின்றி மேலும் சில அமைப்புகள் செய்ய வேண்டிய பணியாகும். இப்போது, இந்தத் திட்டத்தை விளக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக, ஏவு தளத்தை மாற்றியமைப்பது, ராக்கெட்டில் சில மாற்றங்களைச் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ககன்யாங் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வரும் 2020-ஆண்டு டிசம்பரில் ஆளில்லாத விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி, திரும்ப வரவழைக்கப்படும்.
எடை படிப்படியாக உயர்த்தப்படும்: இன்றைய வெற்றி மூலம் பயன்பாட்டு ராக்கெட் பட்டியலில் இணைந்திருக்கும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 6,000 கிலோ எடையைத் தாங்கிச் செல்லும் வகையில் தரம் உயர்த்தப்பட உள்ளது.
சந்திரயான் 2: இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் அடுத்ததாக வரும் 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-2 செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யாங் திட்டம் இந்த ராக்கெட் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட் மூலம் 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் விண்வெளிக்கு விண்கலம் அனுப்பப்படும்.
ஜனவரிக்குள் 10 ராக்கெட் திட்டங்கள்: இஸ்ரோ வரும் 2019 ஜனவரி மாதத்துக்குள் 6 செயற்கைக்கோள்களை அனுப்பும் திட்டம் உள்பட 10 ராக்கெட் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. இதில் முதலாவதாக அடுத்த இரண்டு வாரங்களில் பி.எஸ்.எல்.வி. சி43 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது என்றார் சிவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com