கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரித் தாய்க்கு 125 அடி உயர சிலை: கர்நாடக முதல்வர் அறிவிப்பு 

காவிரியில் கட்டப்பட்டுள்ள  கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரித் தாய்க்கு 125 அடி உயர சிலை நிறுவப்பட உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். 
கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரித் தாய்க்கு 125 அடி உயர சிலை: கர்நாடக முதல்வர் அறிவிப்பு 

பெங்களூரு: காவிரியில் கட்டப்பட்டுள்ள  கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரித் தாய்க்கு 125 அடி உயர சிலை நிறுவப்பட உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகி நெடுந்தூரம் பயணித்து வரும் காவிரி, தமிழகத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.  கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரிய அணைகளில் கிருஷ்ணராஜ சாகர் அணையும் ஒன்றாகும். அமைந்துள்ளது. 

இந்நிலையில் காவிரியில் கட்டப்பட்டுள்ள  கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரித் தாய்க்கு 125 அடி உயர சிலை நிறுவப்பட உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரித் தாய்க்கு 125 அடி உயர சிலை நிறுவப்பட உள்ளது.  இந்த சிலை அமையவுள்ள வளாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் அணையின் முழுத் தோற்றத்தை பார்வையிடும் வகையில், சுமார் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த சிலையானது தனியார் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் நிறுவப்பட உள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் அணைக்கு வருகை தரம் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com