வூஹான் சந்திப்புக்குப் பிறகு இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம்: கெளதம் பம்பாவாலே

சீனாவின் வூஹான் நகரில் அந்நாட்டு பிரதமர் ஷீ ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசிய பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான சில தவறான
வூஹான் சந்திப்புக்குப் பிறகு இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம்: கெளதம் பம்பாவாலே


சீனாவின் வூஹான் நகரில் அந்நாட்டு பிரதமர் ஷீ ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசிய பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான சில தவறான புரிதல்கள் களையப்பட்டு விட்டன என்று சீனாவுக்கான இந்திய தூதர் கெளதம் பம்பாவாலே கூறினார்.
பெய்ஜிங் சென்றுள்ள அவர், சீனாவின் அரசு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
சீனாவின் வூஹான் நகரில் அந்நாட்டுப் பிரதமர் ஷி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் கடந்த ஏப்ரல் மாதம் 27, 28-ஆம் தேதிகளில் சந்தித்துப் பேசினார். இரு நாட்டு விவகாரங்கள் குறித்தும், சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்தும் இருவரும் 10 மணி நேரத்துக்கும் மேலாக கலந்துரையாடினர்.
இரு நாட்டு பிரதமர்களும் நீண்ட நேரம் உரையாடுவதை விரும்புகிறார்கள். அதனால், அலுவல் சாராத சந்திப்புகளையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். வூஹான் சந்திப்புக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே சில தவறான புரிதல்கள் களையப்பட்டு விட்டன.
இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட்டால், பல்வேறு சாதனைகளை நிகழ்த்த முடியும். சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும், சீனாவும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
ஒரு சில விவகாரங்களில் மட்டும் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. குறிப்பாக, இந்தியாவையும், சீனாவையும் பிரிக்கும் எல்லைப் பிரச்னை இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது. இருப்பினும், எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அதை கடந்த 30 ஆண்டுகளாக இரு நாடுகளும் பின்பற்றி வருகின்றன.
ஜப்பானும், சீனாவும் இணைந்து மூன்றாவதாக ஒரு நாட்டில் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளன. இதேபோல், சீனாவுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்தியா முயன்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஒரு திட்டத்தை இணைந்து நிறைவேற்றுவதற்கு பிரதமர் மோடியும், ஷி ஜின்பிங்கும் வூஹான் நகரில் சந்தித்தபோது முடிவு செய்தனர். இது வரவேற்கத்தக்க முடிவு.
இந்தியா, சீனா இடையேயான வர்த்தகத் தொடர்புகள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமன்றி, இரு நாடுகளுக்கு இடையே முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது. பல சீன நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. 
மேலும், இந்தியாவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன என்றார் கெளதம் பம்பாவாலே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com