பேரிடர் மீட்புப் படையினருக்கு நேதாஜி பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி

பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணியில் சிறப்பாக செயல்படும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி பெயரில் தேசிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.  
பேரிடர் மீட்புப் படையினருக்கு நேதாஜி பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி

பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணியில் சிறப்பாக செயல்படும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் தேசிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.  

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர இந்திய அரசு பிரகடனத்தை அக்டோபர் 21,1943-இல் வெளியிட்டார். இதன் 75-ஆவது ஆண்டு விழாவில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றினார். அப்போது, பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்படும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி பெயரில் தேசிய விருது வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் மேலும் தெரிவித்ததாவது, 

"பேரிடர் காலங்களில் மீட்புப் பணியிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சேவைகளிலும் சிறப்பாக செயல்படும் போலீஸாருக்கு இந்த ஆண்டு முதல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் தேசிய விருது வழங்கப்படும். இந்த விருதுகள் நேதாஜி பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி அறிவிக்கப்படும். 

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரில் இருப்பவர்கள் தைரியமான போலீஸார். அவர்களது  தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை தேசம் மறந்துவிடாது. இவர்கள் யார்? ரயில் விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்டனரா, தீ விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்டனரா அல்லது, கட்டடம் இடிந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனரா, எப்போது மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் என்பது யாருக்கும் தெரியாது" என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com