உலகப் புகழ் பெற்ற கேரள படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா? கடனில் மூழ்கும் அபாயத்தில் படகு குழாம்கள்

கேரளாவில் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாவிட்டால், எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் அபாய நிலையை கேரள படகு குழாம்கள் சந்திக்க நேரிடும். 
உலகப் புகழ் பெற்ற கேரள படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா? கடனில் மூழ்கும் அபாயத்தில் படகு குழாம்கள்

கேரளாவில் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாவிட்டால், எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் அபாய நிலையை கேரள படகு குழாம்கள் சந்திக்க நேரிடும். 

கேரளாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற படகுப் போட்டிகள் இந்த வருடம் மழை வெள்ளம் காரணமாக நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படகுப் போட்டிக்காக ஏராளமான குழாம்கள் பல முன் ஏற்பாடுகளை செய்துள்ளன. இந்நிலையில், இந்தப் படகுப் போட்டிகள் நடைபெறாவிட்டால் பல படகு குழாம்கள் கடனில் மூழ்கி, வரும் ஆண்டுகளிலும் படகுப் போட்டிகளில் பங்கேற்கமுடியாத அபாய நிலையை சந்திக்க நேரிடும். 

படகு குழாம்களின் இந்த துயர நிலையை உணர்ந்து கேரள அரசு முன்வந்து உதவும் என்ற நம்பிக்கையில் போட்டியை நடத்துபவர்களும்,  குழாம்களும் இருந்தன. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இது, கேரள படகு குழாம்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதுதொடர்பாக படகுப் போட்டி தலைமை நடுவர் கேஎம் அஷ்ரஃப் கூறுகையில், 

"கேரளாவை கட்டமைக்க செலவுகளை குறைப்பதற்கு அரசு இந்த ஆண்டு படகுப் போட்டிகளை நடத்தவில்லை. இந்த விவகாரத்தை கையில் எடுப்பதாக நிதியமைச்சர் தாமஸ் ஐசக் உறுதியளித்தார். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. அரசு படகுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பது தான் எங்களது கருத்து. படகுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டோம். 

படகுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆனதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ரூ.70 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. படகுப் போட்டிகள் நடைபெறாவிட்டால், அந்த தொகையை அரசு தான் திரும்ப செலுத்த வேண்டும். பணத்தை திரும்ப செலுத்துவது சிறந்ததா, அல்லது போட்டிகளை நடத்துவது சிறந்ததா?

பாம்பு படகுப் போட்டிகளில் 25 குழாம்கள் பங்கேற்கவுள்ளன. சிறிய பிரிவு போட்டிகளில் இதர 78 குழாம்கள் பங்கேற்கவுள்ளன. 

மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் அனைத்தையும் இழந்துவிட்டது போல் தோற்றம் அளிக்கிறது. அந்த பார்வையை படகுப் போட்டிகள் மூலம் மாற்ற முயற்சிக்கலாம். படகுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் கேரளா குறித்து நேர்மறையான தோற்றத்தை சுற்றுலாத் துறை உருவாக்கலாம்" என்றார்.  

சம்பாகுளம் பகுதி, மூளம் படகு குழாமைச் சேர்ந்த முரளி என்பவர் கூறுகையில், 

"அனைத்து குழாம்களும் படகுகளை அதன் உரிமையாளர்களிடம் இருந்து தான் குத்தகைக்கு எடுப்பார்கள். அதற்கான முன் தொகையும், வாடகையும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. அனைத்து குழாம்களும் 15 முதல் 20 நாட்கள் முன்னோட்டத்தில் ஈடுபடும். இதற்கு மட்டுமே சுமார் 1.5 லட்சம் ரூபாய் செலவாகும். 

சிறிய படகுகள் என்றால் 25,000 முதல் 50,000 வரை செலவாகும். படகுப் போட்டிகளுக்காக படகு குழாம்கள் பெரிய தொகையை செலவிட்டுள்ளன. அதனை, படகுப் போட்டிகள் மூலம் திரும்ப பெறலாம் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் உள்ளனர். ஆனால், அதற்கான அனைத்து திட்டங்களுமே தற்போது நீர்த்துப்போய்விட்டது. இந்த நிலைமை சீரடையாவிட்டால் வரும் ஆண்டுகளில் நடைபெறும் படகுப் போட்டிகளில் பல படகு குழாம்களால் பங்கேற்க முடியாத அபாய நிலை ஏற்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com