ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் - பிரதமர் மோடி தெளிவுபடுத்த ராகுல் கோரிக்கை

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தில்லியில் சனிக்கிழமை தெரிவித்தார். 
ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் - பிரதமர் மோடி தெளிவுபடுத்த ராகுல் கோரிக்கை

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தில்லியில் சனிக்கிழமை தெரிவித்தார். 

ஏப்ரல் 10, 2015-இல் அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹோலன்டை பாரிஸில் சந்தித்துப் பேசிய இந்திய பிரதமர் மோடி, 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council) ஆலோசனைகளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 

இந்த விமான கொள்முதலில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் படி விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க இந்திய நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை டஸால்ட் நிறுவனமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. 

ஆனால், பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்காமல், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை டஸால்ட் நிறுவனம் தேர்ந்தெடுத்தது.

இதை குறிப்பிட்டு தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்ததில் இந்திய அரசு மற்றும் பிரான்ஸ் அரசின் தலையீடு இல்லை என்று மத்திய அரசும் தொடர்ந்து மறுத்து வருகிறது. 

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரைத்தது என்று முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் தெரிவித்தார். 

இதனிடையே, டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் இன்று  காலை, ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை நாங்கள் தான் தேர்ந்தெடுத்தோம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.  

இதையடுத்து, ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,   

"முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கூறிய கருத்துக்கு பிரதமர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இது பாதுகாப்புப் துறையின் ஊழல் தொடர்பான விவகாரம். பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார். பிரதமர் மோடியை பாதுகாப்பதற்காக இந்த அரசின் பல்வேறு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பொய் கூறுவது தெளிவாகிறது. இததொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும். அதற்கு  பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலன்டையும் அழைக்க வேண்டும். 

பிரதமர் ஊழல் செய்துள்ளார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அவர் தெளிவுபடுத்த வேண்டும். ஹோலன்ட் கூறிய கருத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது ஹோலன்ட் பொய் கூறுகிறார் என்று மறுத்து உண்மையை விளக்க வேண்டும். பிரதமராக இது அவருக்கு மிக அவசியம்" என்றார் அவர். 

பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஃபிரான்கோய்ஸ் கருத்துக்கு ராஜ்நாத் விளக்கம்:

பிரான்ஸ் அதிபர் தெரிவித்த கருத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், 

"இந்த விவகாரம் தொடர்பாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஃபேல் ஊழல் தொடரபாக பிரான்ஸ் அதிபர் கூறியதாக வெளிவந்துள்ள ஊடகச் செய்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அது ஆய்வு செய்யப்பட்ட பிறகு உண்மை வெளிவரும்" என்றார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com