இந்தியாவில் சீன முதலீடுகள் அதிகரிக்கும்: தமிழக அதிகாரி நம்பிக்கை

சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அதிக அளவில் ஈடுபாடு காட்டுவதாக தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பின்


சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அதிக அளவில் ஈடுபாடு காட்டுவதாக தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பின் செயல் துணைத் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. அதுதொடர்பான தகவல்களை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துச் செல்லவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரி வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவும், சீனாவும் உலக அளவில் அதிவேகமான வளர்ச்சியை அடைந்து வரும் நாடுகள். அதேபோன்று இரு நாடுகளிலும் முதலீட்டு வாய்ப்புகள் கணிசமாக உள்ளன. ஆனால், தற்போதைய சூழலில் சீனாவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகரித்து வருகிறது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது அது மூன்று மடங்கு அங்கு அதிகமாக உள்ளது.
சீனாவுக்கு தமிழக குழு சென்றபோது இதை நேரடியாக காண முடிந்தது. அந்நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில் தற்போது 12-இல் இருந்து 15 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com