கிரண்பேடியை மாற்ற வேண்டும்: உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சபாநாயகர் கடிதம்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்றக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர்
கிரண்பேடியை மாற்ற வேண்டும்: உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சபாநாயகர் கடிதம்!


புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்றக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்தியலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.

39 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி ஆளுநர் மாளிகை முன் முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் புதன்கிழமை பிற்பகல் முதல் சாலையிலேயே விரிப்புகளை விரித்து தர்னாவில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் நாராயணசாமி. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் கிரண் பேடி விடுத்த அழைப்பை நிராகரித்த முதல்வர் நாராயணசாமி, 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதற்காக பாதுகாப்புக்காக துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புடன் ஆளுநர் மாளிகையை விட்டு கிரண்பேட்டி வெளியேறி உள்ள நிலையில், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை, முற்றுகை போராட்டம் தொடரும் என்று முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் 3-ஆவது நாளாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிரண்பேடியால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடுவதுடன் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டிள்ளார். 

இந்நிலையில், துணை நிலை கிரண்பேடியை மாற்றக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்தியலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசில் துணை நிலை ஆளுநரின் கிரண்பேடியின் தலையீடு அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுவதால், கிரண்பேடி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். புதுச்சேரியில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்றும், தற்போதைய அசாதாரண சூழலை எதிர்கொண்டு, நிர்வாகத்தை செம்மைப்படுத்தும் திறமையான இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com