உ.பி.: சமாஜவாதி 37, பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளில் போட்டி

வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி 37 தொகுதிகளிலும்,
உ.பி.: சமாஜவாதி 37, பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளில் போட்டி


வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி 37 தொகுதிகளிலும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கின்றன. இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.
80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என இருகட்சிகளும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தன. அப்போது, இரு கட்சிகளும் சமஅளவிலான தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என்றும் முடிவெடுத்தன. இந்நிலையில், இரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகின்றன என்பது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் சமாஜவாதி கட்சிக்கான எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டு 37 தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  பிரதமர் மோடியின் வாராணசி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்.பி.யாக இருந்த கோரக்பூர், லக்னெள  உள்ளிட்டவை சமாஜவாதி கட்சி போட்டியிடும் முக்கியத் தொகுதிகள் ஆகும். அலிகர், ஆக்ரா, பிஜ்னோர், சஹாரன்பூர், சுல்தான்பூர், சலீம்பூர், சிக்ரி உள்ளிட்ட 38 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் போட்டியிட இருக்கிறது.
எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பான ஒப்பந்தத்தில் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com