2014-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி: தொழில்நுட்ப நிபுணர் மீது போலீசில் புகார்  

2014-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய லண்டன் தொழில்நுட்ப நிபுணர் மீது தேர்தல் ஆணையம் போலீசில் புகார் கூறியுள்ளது. 
2014-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி: தொழில்நுட்ப நிபுணர் மீது போலீசில் புகார்  

புது தில்லி: 2014-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய லண்டன் தொழில்நுட்ப நிபுணர் மீது தேர்தல் ஆணையம் போலீசில் புகார் கூறியுள்ளது. 

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்றும்; கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாகவும் சையது சுஜா என்ற இந்திய மின்னணு தொழில்நுட்ப நிபுணர் சமீபத்தில் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புகார் கூறியிருந்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் கபில்  சிபல் கலந்து கொண்டது சர்ச்சைக்கு மேலும் திரி கிள்ளியது. 

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு இருந்ததாவது:

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாரத மின்னணு நிறுவனம் மற்றும் இந்திய மின்னணு கழகம் ஆகியவற்றால் கடுமையான கண்காணிப்பு-பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் மிக கவனமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. 

மின்னணு துறையில் புகழ்பெற்ற நிபுணர்கள் அடங்கிய குழு, இந்த நடைமுறைகளை கண்காணிக்கிறது. 

சையது சுஜா விவகாரத்தில் சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. 

இந்நிலையில் 2014-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய லண்டன் தொழில்நுட்ப நிபுணர் மீது தேர்தல் ஆணையம் போலீசில் புகார் கூறியுள்ளது. 

தில்லி போலீசில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள புகாரில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சையது சுஜா பொய் பிரசாரம் செய்து வருவதாகவும், அவர் மீது சட்டப்பூர்வ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com