தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கால அவகாசம் உள்ளது: தேர்தல் ஆணையம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஏப்ரல் 24ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கால அவகாசம் உள்ளது: தேர்தல் ஆணையம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஏப்ரல் 24ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகத்தில் 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஏப்ரல் 24ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே அதற்குள் இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. 

திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: 
பல்வேறு அரசியல் காரணங்களால் 18 எம்.எல்.ஏ.க்களை பேரவைத் தலைவர் தகுதியிழப்பு செய்தார். இதற்கு எதிராக 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில்லை என 18 எம்.எல்.ஏ. க்களும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த  18 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய இயலாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படும்போது, மற்ற 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. 

இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதை அடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com