சபரிமலைக்குள் நுழைந்தவரால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை: இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார் கனக துர்கா

பொது வழங்கல் துறை ஊழியரான கனகதுர்கா (39), சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்த இரண்டு பெண்களில் ஒருவர். இவர் இன்று தனது வீட்டுக்குள் நுழைய முடியாமல் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற கனக துர்காவின் முடிவை ஏற்க மறுத்த அவரது குடும்பத்தினர், அவரை தங்களது வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

முன்னதாக, தனது வீட்டுக்குச் சென்ற கனக துர்காவை அவரது மாமியார் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த கனகதுர்கா கடந்த ஜனவரி 15ம் தேதி கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கனகதுர்கா தன்னைத் தாக்கியதாகக் கூறி அவரது மாமியாரும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.

இந்த நிலையில் மீண்டும் கனகதுர்கா தனது வீட்டுக்குச் சென்ற போது அது பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்த காவல்துறை, கனக துர்காவை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். அவரது கணவரை அழைத்து விசாரித்தனர். அவர் வீட்டின் சாவி தொலைந்துவிட்டதாகக் கூறிவிட்டார்.

கனகதுர்காவின் கணவர் வீட்டார் அவரை வீட்டுக்குள் சேர்க்கக் கூடாத என்பதற்காக, வீட்டை பூட்டிவிட்டு வேறு எங்கோ தங்கியிருப்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இதனால் வேறு வழியில்லாமல் அரசு சகி இல்லத்துக்கு கனக துர்கா சென்றுள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடகவும் கனக துர்கா முடிவு செய்துள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com