காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை: அரவிந்த் கேஜரிவால்

மக்களவைத் தேர்தலில் தில்லியில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை: அரவிந்த் கேஜரிவால்


மக்களவைத் தேர்தலில் தில்லியில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

17-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளனர். இந்த கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இடம்பெற்றுள்ளது. ஆனால், தில்லியில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் எதிரும் புதிருமாக இருப்பதால் அங்கு இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அதேபோல், தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க தில்லி காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், தில்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்தது. 

இந்நிலையில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வந்தன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இரண்டு கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் கசிந்தன.

இந்த நிலையில், தில்லி காங்கிரஸ் செயல் தலைவர்களுடன் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் இன்று அவசர ஆலோசனையும் நடத்தினார். அதனால், ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி குறித்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. 

ஆனால், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இதை நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் இன்று இரவு தெரிவிக்கையில், 

"கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் எங்களிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டது. காங்கிரஸுடன் நாங்கள் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை" என்றார். 

மேலும், காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையிலான பேச்சுவார்த்தை இறுதியானதாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் அரவிந்த் கேஜரிவால் நிராகரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com