மத்திய அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உதம்பூர்-தோடா தொகுதியிலும்,


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உதம்பூர்-தோடா தொகுதியிலும், பாஜக எம்.பி. ஜுகல் கிஷோர் சர்மா ஜம்மு-பூஞ்ச் தொகுதியிலும் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் இருவரும் இப்போதும் அத்தொகுதி எம்.பி.க்களாக உள்ளனர்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் மனு தாக்கலின்போது உடன் இருந்தார். மனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜிதேந்தர சிங், எனது தொகுதியில் சிறப்பான பல பணிகளை ஆற்றியுள்ளேன். எனது பணிகளை மேலும் தொடரும் வகையில் மீண்டும் போட்டியிடுகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சிறப்பான செயல்பாடுகள் நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும். இது எனது வெற்றியை உறுதி செய்யும் என்றார்.
மற்றொரு மத்திய அமைச்சர் மனு தாக்கல்: உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகர் (நொய்டா) தொகுதியில் மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார். அவர், ஏற்கெனவே இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். 
இங்கு பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறது. 
எனவே, இத்தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு முன்பு மகேஷ் சர்மா தனது குடும்பத்துடன் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com