2019 மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் தேர்தல் குழு: ராகுல் காந்தி அறிவிப்பு

2019 மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் 9 பேர் கொண்ட மத்தியக்குழு, 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக்குழுவும், 13 பேர்
2019 மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் தேர்தல் குழு: ராகுல் காந்தி அறிவிப்பு


புதுதில்லி: 2019 மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் 9 பேர் கொண்ட மத்தியக்குழு, 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக்குழுவும், 13 பேர் கொண்ட விளம்பரக்குழுவை அமைத்துள்ளார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி.

2019-இல் வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீவிர முனைப்புடன் பல்வேறு விவகாரங்களை எழுப்பி விமர்சித்து வருகிறது. பாஜகவை எதிர்த்துத் தேர்தல் களத்தில் நிற்கவும் வலுவான, மதச்சார்பில்லாத கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, வரும் 2019-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு, தேர்தல் விவகாரங்களை கண்காணிப்பதற்காக 3 முக்கியக் குழுக்களை அமைத்துள்ளார். 

9 பேர் கொண்ட தேர்தல் மத்திய குழுவில், மூத்த தலைவர்களான ஏ.கே. அந்தோனி, குலாம் நபி ஆசாத், ப சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

தேர்தலில் கட்சியின் அறிக்கைகளை கவனித்துக்கொள்ளும் வகையில் கட்சி தலைவர்கள் உள்ளடக்கிய 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவில், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், சசி தரூர், குமாரி செல்ஜா, முன்னாள் ஹரியானா முதல்வர் பூபேந்திர்சிங் ஹூடா, மேகாலயா முன்னாள் முதல்வர் முகல் சங்மா, தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பஞ்சாப் நிதி அமைச்சர் மன்பிரீத் பாதல், கட்சியின் மகளிர் அணித் தலைவர் சுஷ்மிதா தேவ், மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா, கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் துறையின் தலைவர் தம்ராஜ்வாஜ் சாஹு, பிந்து கிருஷ்ணன், ரகுவீர் மீனா, பாலச்சந்திர முங்கேகர், மீனாட்சி நடராஜன், ரஜினி பாட்டீல், சாம் பிட்ரோடா, சச்சின் ராவ், லலிதீஷ் திரிபாதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோன்று 13 பேர் கொண்ட தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கை விளம்பர குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், ரன்தீப் சுர்ஜேவாலா, முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, ராஜீவ் சுக்லா, பக்த சரண் தாஸ், பிரவீன் சக்ரவர்த்தி, மிலிந்த் தியோரா, குமார் கேத்தார், பவன் கேரா, வி.டி.சத்தீசன், ஜெய்வீர் ஷெர்கில், சமூக ஊடகப்பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமோத் திவாரி இடம் பெற்றுள்ளவர்கள் கட்சியின் விளம்பரங்களுக்கான பணிகளை கவனித்துக்கொள்வார்கள். 

குழுக்களின் அமைப்பின்படி, பொதுத் தேர்தலுக்காக ஒரு பொது அறிக்கை மற்றும் ஒருங்கிணைப்புக்கான திட்டம் உருவாக்கும் பணி தொடங்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com