சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 

வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் வடதமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான
சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 


வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் வடதமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

இதனால், தெற்கு, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, தமிழக மீனவர்கள் அந்தமான், தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வியாழக்கிழமையும், ஆந்திரம், மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு வியாழன் வெள்ளிக்கிழமைகளிலும் (செப். 20, 21) கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில், ஆந்திரா அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டல்ம் வலுப்பெறும் என்பதால் ஆந்திரா கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்க விடுத்துள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com