நாகை அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை மீட்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை மீட்ப்பு குழுவினரால் பாதுகாப்பாக

நாகை: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை மீட்ப்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வேதாரண்யம் அடுத்த புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டிய 18 அடி ஆழம் கொண்ட ஆழ்த்துளை கிணற்றில் கார்த்திகேயன் என்பவரின் 2 வயது மகள் சிவதர்ஷிணி தவறி விழுந்தார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைஞாயிறு மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா் ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி 3 மணி நேர பேராட்டத்திற்கு பின்னர் குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.  

மீட்கப்பட்ட குழந்தை சிவதர்ஷிணிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனக் குழுவினர் முதலுதவி சிகிச்சைக்கையுடன், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தை நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com