திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.13.5 கோடி காணிக்கை செலுத்திய 2 வெளிநாடு வாழ் இந்திய பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த 2 இந்திய பக்தர்கள் பேர் ரூ.13.5 கோடி காணிக்கையாக வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலக பணக்கார கோயில்களில் இரண்டாம் இடமும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் கோயிலாகவும் திருப்பதி ஏழுமலையான் கோயில் திகழ்கிறது. 

புகழ்பெற்ற திருமலை கோயிலுக்கு அமெரிக்கா போஸ்டனில் பணிபுரியும் இகா ரவி என்பவர் வெங்கடேஸ்வரா ஆன்லைன் உண்டியல் மூலமாக ரூ.10 கோடியும், ஸ்ரீனிவாச குதிக்கொண்டா என்பவர் ரூ.3.50 கோடிக்கான காசோலையை நேரில் வந்து அளித்ததாகவும் திருமலை தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும், திருப்பதியில் இயங்கிவரும் அனாதை ஆசிரமங்கள், மருத்துவமனை, மக்கள் நல அறக்கட்டளைகள் என தான் வழங்கிய தொலையை செலவிட வேண்டும் என்றும் குதிக்கொண்டா தெரிவித்துள்ளார். 

ஆந்திர அமைச்சர் அமர்நாத் ரெட்டி, குழு உறுப்பினர் சந்திர வெங்கட வீரய்யா முன்னிலையில் குதிக்கொண்டா இந்தக் காணிக்கையை வழங்கியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com