திருமலையில் நாளை ஆர்ஜித சேவைகள் ரத்து

திருமலையில் புதன்கிழமை (ஜன.16) அங்கப்பிரதட்சணம் மற்றும் பல ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.


திருமலையில் புதன்கிழமை (ஜன.16) அங்கப்பிரதட்சணம் மற்றும் பல ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் புதன்கிழமை பார்வேட்டை உற்சவம், கோதா பரிணய உற்சவம் (ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்) நடைபெற உள்ளது. 
அதனால் அன்று ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அங்கப்பிரதட்சணம், தோமாலை, அர்ச்சனா, சகஸ்ர தீபாலங்கார சேவை, சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 
எனவே, புதன்கிழமை காலை அங்கப்பிரதட்சணம் செய்வதற்காக, மத்திய விசாரணை அலுவலகத்தில் வழங்கப்படும் டிக்கெட் செவ்வாய்க்கிழமை காலை வழங்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


உண்டியல் வருமானம் ரூ. 2.49 கோடி
 திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் சனிக்கிழமை ரூ. 2.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.49 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com